General21 May 2013

தனியார் சங்கம் எச்சரிக்கை

போராட்டத்தில் பங்கேற்ற பேரூந்துகளின் பாதை அனுமதி பத்திரம் ரத்துச் செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்ளுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்சமயம், தமது சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அஞ்சன பிரியஞ்சித் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் எமது செய்தி பிரிவு வினவியது.

மேல்மாகாணத்தில் போக்குவரத்தில் ஈடுப்படும் 6 பேரூந்துகளின் பேக்குவரத்து அனுமதி பத்திரத்தை ரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

அத்துடன், மாகாண மட்டத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்ட பேரூந்துகள் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டது.
Related recommendation
Hiru TV News | Programmes