General21 May 2013

கச்சத்தீவை மீட்குமாறு ஜெயலிலதா கடிதம்


இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். 

இந்தியாவுக்கும் இலங்கை இடையே, கடந்த 1974ஆம் மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவானது இலங்கைக்கு கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என ஜெயலலிதா ஜெயராம் மத்திய அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார். 

கச்சத்தீவை மீட்க வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்றத்திலும்; வழக்கு தொடரப்பட்டது. 

மேலும் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி, தமிழக சட்ட சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தின் பாரம்பரிய பகுதியான கச்சத்தீவை மீட்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கச்சத்தீவை மீட்டபிறகு சர்வதேச கட்சார் எல்லைக்கோடு பகுதியை மீண்டும் வரையறை செய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes