General21 May 2013

தொழிற்சங்க போராட்டத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம்


தொழிற்சங்க போராட்டத்தின் ஊடாக இன்று வழங்கப்பட்ட சமிஞ்ஞையை அரசாங்கம் உரியமுறையில் புரிந்து கொண்டு செயற்படாதபட்த்தில் விசாகபூரணை தினத்திற்கு பின்னர் புதிய போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்தியநிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த மத்திய நிலையத்தின் தலைவரான ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தலை விடுத்துள்ளார்.

இன்றைய தொழிற்சங்க போராட்டத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு தாம் போதுமான அழுத்தத்தை கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இன்று முற்பகல் இடம்பெற்ற பிரிதொரு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, அடையாள பணிப்புறக்கணிப்பை முறியடிப்பதற்கு அரசாங்கம் பலவித முயற்சிகளை மேற்கொண்டதாக குற்றம்சுமத்தினார்.

எவ்வாறாயினும், அடையாள பணிநிறுத்த போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக பிரதியமைச்சர் அர்ல் குணசேகர இன்று தமது வீட்டில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

அதனால், ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தமது பதவிகளிலிருந்து விலகுவாரா என்றும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.


Related recommendation
Hiru TV News | Programmes