Hirunews Logo
Video%3A+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Monday, 13 January 2014 - 8:23
Video: ஹிருவிற்கு பல விருதுகள்
22,121

Views
2014ஆம் ஆண்டுக்கான அரச தொலைக்காட்சி விருது வழங்கும் நிகழ்வில், பல விருதுகளை ஹிரு தொலைக்காட்சி பெற்றுள்ளது.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் தொலைக்காட்சி நாடகங்களுக்கான அதிக விருதுகளை ஹிரு தொலைக்காட்சி பெற்றுள்ளது.

இதன்படி, யக்கட பாஹன் திர தொலைகாட்சி நாடகமானது வருடத்தின் சிறந்த தொலைகாட்சி நாடகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், யக்கட பாஹன் திர நாடகத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது, சிறந்த இசையமைப்பு, சிறந்த சீரமைப்பு, சிறந்த பிண்ணனி இசை, சிறந்த துணை நடிகைக்கான விருதுகளும் கிடைக்கப்பெற்றன.

அத்துடன், தினன லமாய் வேலைத்திட்டமானது வருடத்தின் சிறந்த விளையாட்டு செய்திக்கான விருதினை பெற்றது.

இதன்படி, சிறந்த தொலைக்காட்சி நாடகமாக தெரிவு செய்யப்பட்ட யக்கட பாஹன் திர தொலைகாட்சி நாடகத்தின் இயக்குநர் அனுராதா ஜயசிங்க வருடத்தின் சிறந்த இயக்குநராக தெரிவு செய்யப்பட்டார்.

சிறந்த படப்பிடிப்பாளருக்கான விருதை சிந்தக சோம கீர்த்தி பெற்றுக்கொண்டார்.

சிறந்த ஒலி அமைப்பாளருக்கான விருதை ரஞ்சித் ருபசிங்க பெற்றுக்கொண்டார்.

திஸ்ச சுரேந்திர வருடத்தின் சிறந்த தொகுப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ருவான் வல்பொல விருது பெற்றார்.

சிறந்த துணை நடிகைக்கான விருதை சுலோச்சனா வீரசிங்க பெற்றார்.

யக்கட பாஹன் திர தொலைக்காட்சிக்கான விருதை சாயா ஜயசிங்க பெற்றுக்கொண்டார்.

சிறந்த விளையாட்டு செய்திகளுக்கான விருதையும் ஹிரு தொலைகாட்சியின் செய்தி அறிக்கையில் ஒளிபரப்பாகும் தினன லமாய்  பெற்றது.
ஹிரு தொலைக்காட்சி தயாரிப்பான இதன் பணிப்பாளராக கவிந்து பணிப்பாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,615 Views
16,601 Views
1,692 Views
827 Views
30 Views
44,939 Views
Top