Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-Video
Wednesday, 18 June 2014 - 9:54
தொம்சன் நிதியத்தின் விருது சான்றிதழ்-Video
22,699

Views
பிரித்தானியாவின் தொம்சன் நிதியத்தின் ஊடாக வருடாந்தம் வழங்கப்படும் விஷேட செய்தி வெளியீட்டிற்கான விருது சான்றிதழை ஹிரு.டி.வி பெற்றுக் கொண்டது.

நாட்டின், இலத்திரனியல் ஊடக நிறுவனம் ஒன்று முதற் தடவையாக பெற்றுக் கொண்ட இந்த விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் லண்டன் நகரில் இடம் பெற்றது.

ஹிரு.டி.வி சீ.ஐ.ஏ விஷேட பிரிவிற்கே இந்த ஊடக விருது வழங்கப்பட்டுள்ளது.

வனாத்தவில்லு, கிரீன் பீல்ட் காணி மோசடி தொடர்பில் வெளியிட்ட செய்தி தொகுப்பிற்கே இந்த விருது கிடைக்க பெற்றுள்ளது.

இதற்காக, 6 மாதங்களுக்கு மேல் தகவல்கள் சேரிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, நாட்டில் இடம் பெற்ற பாரிய காணி மோசடி தொடர்பான தகவல் வெளியிடப்பட்டதுடன், அதன் ஸ்தாபகரான ரொஹான் சமன் ரத்நாயக்கவையும் சட்டத்தின் முன் கொண்டு செல்ல ஹிரு சீ.ஐ.ஏ பிரிவிற்கு வாய்ப்பு கிடைக்க பெற்றது.

தென் ஆசிய வலயத்தில், இவ்வாறான 250க்கும் மேற்பட்ட தொகுப்புக்களை பின்தள்ளியே ஹிரு.டி.விக்கு இந்த விருது கிடைத்தது.

1963 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தொம்சன் நிதியம், ஐந்து தசாப்த காலத்திற்கும் மேலாக ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி நடவடிக்கைகளை முன் எடுப்பதுடன், உலகின் முதலாவது புண்ணியதான நிதியமாகவும் கணிக்கப்படுகின்றது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,639 Views
16,690 Views
1,792 Views
930 Views
15 Views
45,045 Views
Top