Hirunews Logo
%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%80.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81+-Video
Tuesday, 11 November 2014 - 20:03
ஹிரு டீ.விக்கு மற்றுமொரு விருது -Video
274,326

Views
இலங்கை நேயர்களுக்கு புதிய அனுபவங்களை ஏற்படுத்தும் வகையில் ஹிரு டீ.விக்கு மற்றுமொரு சர்வதேச விருது கிடைக்க பெறவுள்ளது.

சர்வதேச ரீதியாக பல நாடுகள் பங்கு கொண்ட இந்த விருது வழங்கலில் ஹிரு டீ.வி.தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் “வேல்ட் சமிட் எவோர்ட்ஸ் 2014” இன் போது, ஹிரு.டி.வி நிகழ்ச்சிகளை கையடக்க தொலைபேசிகள் ஊடாக பார்வையிடுவதற்கான மென்பொருள் பயன்பாட்டிற்கே இந்த விருது கிடைக்க பெறவுள்ளது.

தமது நேயர்களின் புதிய அனுபவத்தை வெற்றி கொள்ளும் வகையில் ஹிரு.டீ.வி கையடக்க மென்பொருள் பயன்பாடு யூ.டியூப் இணையத்தளம் மற்றும் சம்பந்தப்பட்ட இணையத்தளங்களை இலங்கையில் முதற்தடவையாக பயன்படுத்திய தொலைகாட்சியாகும்.
நாடு பூராகவும் சகல என்ரோய்ட் மென்பொருள்களும் உள்ளடங்கிய கூகுள் ப்ளே ஸ்டோர் உயர்ந்த இடத்திற்கு ஹிரு டி.வி மென்பொருள் குறுகிய காலப்பகுதியில் பல நேயர்களை இணைத்து கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இலங்கையில் தொழில்படும் சகல தொலைக்காட்சி கையடக்க பிரயோகங்களில் முதன்மையாக ஹிரு.டீ.வி தகுதியினை பெற்றதன் காரணமாக இந்த விருது கிடைக்க பெறவுள்ளது.

தொலைத்தொடர்பு தொழில்நுட்ப துறையில் நிபுணத்துவம் வாய்ந்த குழுவொன்றினால் ஆய்வுக்கு உட்படுத்திய நிலையில் இந்த விருது கிடைக்க பெறவுள்ளது.

500 கையடக்க மென்பொருள்களில் ஹிரு.டீ.வி கையடக்க மென்பொருள் இந்த சாதனையை பெற்றுள்ளது.

ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் இணை நிறுவனமான வரையறுக்கப்பட்ட  லோட்டஸ் டெக்னொலஜி நிறுவனத்திற்கு கிடைத்துள்ள மைல் கல் நிறுவனத்திற்கு ஆசிய ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் தலைவர் ரேனோ சில்வா தமது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறையில் டிஜிட்டல் முறைமையை கொண்டுள்ள இந்த செயல்பாடு மிகவும் பாராட்டக் கூடிய முறைமையை பெறும் எனவும் தலைவர் ரேனோ சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் பீட்டர் ஏ பிரக் வெற்றியாளர்கள், மிக திறமை வாய்ந்த முக்கிய உள்ளூர் தேவைகளை, உள்ளூர் அபிவிருத்தி முறைமையின் கீழ் பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது என தெரிவித்தார்.

அடுத்த மாதம் அபுதாபியில் நடைபெறவுள்ள “வேல்ட் சமிட் எவோர்ட்ஸ் 2014” இன் போது 100 நாடுகளை சேர்ந்த 500 போட்டியாளர்களை வெற்றி கொண்டு ஹிரு டீ.வி சரித்திரம் படைத்துள்ளது.

இதற்கமைய, ஊடகம் மற்றும் செய்தி பிரிவுக்களுக்காவே இந்த விருது கிடைக்க பெறுவது குறிப்பிடதக்கது.









Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,700 Views
16,896 Views
1,968 Views
1,098 Views
65 Views
45,244 Views
Top