ஏற்றுமதி வீழ்ச்சி

Saturday, 24 January 2015 - 9:26

%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
கடந்த வருடம் நொவம்பர் மாதம் இலங்கையின் ஏற்றுமதிகள் 11 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதிகளில் ஏற்பட்ட சரிவே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

அத்துடன் இறப்பர் மற்றும் தேயிலை ஏற்றுமதிகளும் வீழ்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நொவம்பர் மாதம் 921 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதிகள் இடம்பெற்றுள்ளன.

அதேநேரம் அந்த காலப்பகுதியில் இலங்கை இறக்குமதிகள் 4.8 சதவீதத்தால் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.








Exclusive Clips