%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Sunday, 18 October 2015 - 14:44
வருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்
38

Shares
4,672

Views
இந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாத்துறையினர் இலங்கை வருவர் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மாநாட்டு பணியகத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி விப்புல வனிகசேகர தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் இது தொடர்பான 365 மாநாடுகள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல 1016ஆம் ஆண்டு 375 சந்திப்புக்கள் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, சுற்றுலாத்துறையில் கடந்த வருடம் புதிதாக 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் அந்த தொகை 42 ஆயிரமாக அதிகரிக்கும் அதேவேளை, அடுத்த வருடத்தில் 45 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கை மாநாட்டு பணியகத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE