சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Tuesday, 09 February 2016 - 8:20

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த மாதம் 24.3 சதவீத அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
 
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது.
 
இந்த வருடம் ஜனவரி மாதம் 1 லட்சத்து 94 ஆயிரத்து 280 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
 
இந்த எண்ணிக்கை கடந்த வருடம் ஜனவரி மாதம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 246 பேராக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேநேரம், வட அமெரிக்கர்களின் வருகை 17.3 சதவீதத்தாலும், ஐக்கிய அமெரிக்கர்களின் வருகை 17.2 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.
 
மேலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் வருகை 28.8 சதவீதமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 







Exclusive Clips