ஐரோப்பா சுற்றுலா பயணிகளை கவர நடவடிக்கை....

Thursday, 19 January 2017 - 20:41

%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88....
ஐரோப்பாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்காக கொழும்பில் சர்வதேச தரம்வாய்ந்த சில விடுதிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐரோப்பா கண்டம் குறித்து விடேசமாக கவனம் செலுத்துவதற்காக சுற்றுலாத்துறை ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு 2 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க வெளிநாட்டு ஊடகமொன்றிடம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2020 ஆம் ஆண்டளவில் 4 மில்லியன்களாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips