தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை குறைவு...

Wednesday, 24 May 2017 - 16:13

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81...
2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆம் ஆண்டில் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கையானது 7.8 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தொழில் நிலையின் மொத்த வெளிச்செல்லல்கள் 2015 ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 63 ஆயிரத்து 443 ஆகா காணப்பட்டுள்ளது.

எனினும், 2016 இல் 2 லட்சத்து 42 ஆயிரத்து 930 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் வெளிச் செல்லல்கள் 2015 இல் 90 ஆயிரத்து 655 லிருந்து 2016ல் 8.9 சதவீதத்தால் 82 ஆயிரத்து 628 இற்கு குறைவடைந்துள்ளது.

இதேவேளை, ஆண்களின் வெளிச் செல்லல்கள் 2015 இல் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 788 லிருந்து 2016 இல் 7.2 சதவீதத்தால் குறைவடைந்து ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 302 இற்கு குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.







Exclusive Clips