ஆரம்ப தொழில்துறை அமைச்சி குறித்து தயா கமகே

Monday, 26 June 2017 - 19:34

%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87
நியூசிலாந்து ஆரம்ப தொழில்துறை அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் காரணமாக நியூசிலாந்தின் பொருளாதார அபிவிருத்தி குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை பெற்றுள்ளதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
 
அதே முறைமையினை இலங்கையிலும் மேற்கொள்ள தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
இலங்கையில் இதற்கு ஏற்ற வகையில் பெறுமதி சேர் உற்பத்தி பொருட்களை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்ப தொழில்துறை அமைச்சினை ஸ்தாபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பொருட்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
 
இது தவிர, புதிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச பொருட்காட்சிகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
 
அத்துடன், இந்தியா, சீனா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் திட்டமிடப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் ஏராளமான வர்த்தக சந்தைகளை இலங்கை பெற வாய்ப்பு ஏற்படும் என குறிப்பிட்டார்.







Exclusive Clips