சிறுபோக நெல் அறுவடை 48 சதவீதம் வீழ்ச்சி..?

Saturday, 15 July 2017 - 19:51

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88+48+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF..%3F
இந்த வருட சிறுபோக நெல் அறுவடையின்போது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 48 சதவீதம் வீழ்ச்சியை எதிர்நோக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வருடத்தில் சிறுபோக நெல் அறுவடையின்போது 7 லட்சத்து 89 ஆயிரம் மெட்ரிக் டொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

எனினும் கடந்த வருட இறுதிப் பகுதியில் இருந்து பருவகால மழை பொய்த்தமையினால் ஏற்பட்ட வரட்சி நிலை மற்றும் வெள்ளம் காரணமாக இந்த வருட நெல் அறுவடையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் பெரும்போக நெல் அறுவடையின் போதும் 49 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல் மற்றும் தென்மேல் பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ள நிலை காரணமாக நெற்பயிர்ச் செய்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளநிலை காரணமாக 5 ஆயிரத்து 349 ஹெக்டேயர்களில் 16 ஆயிரத்து 870 மெட்ரிக் டொன் நெல் அறுவடை இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்திற்கான நெல் அறுவடையில் 20 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
 







Exclusive Clips