ஜுன் மாத பணவீக்கம் மாற்றமின்றி பதிவாகியுள்ளது..

Wednesday, 26 July 2017 - 8:04

+%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81..
இலங்கையின் வருடாந்த சராசரி பணவீக்கம் கடந்த ஜுன் மாதம் 6.1 சதவீதமாக மாற்றமின்றி பதிவாகியுள்ளது.

இது கடந்த 18 மாதங்களில் நிலவும் அதிகூடிய பணவீக்க புள்ளியாகும்.

2015ம் ஆணடு டிசம்பவர் மாதம் வெளியாக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் படி, தேசிய பணவீக்கமானது 3.8 சதவீதமாக நிலவியது.

அதேநேரம் நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த வளர்ச்சியின் அடிப்படையில், கடந்த மே மாதத்தைக் காட்டிலும் 1.3 சதவீத அதிகரிப்பை ஜுன் மாதம் வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஜுன் மாதம் 123.4 புள்ளிகளாக நுகர்வோர் விலைச்சுட்டெண் பதிவாகியுள்ளது.

குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு இந்தநிலைக்கு வழிகோலியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips