இலங்கை மீனுணவு உற்பத்தித் துறையில் பாரிய முதலீடு

Saturday, 09 September 2017 - 19:35

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
இலங்கை மீனுணவு உற்பத்தித் துறையில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள சீன முதலீட்டாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
 
கடற்தொழிற்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி இதனை தெரிவித்துள்ளார்.
 
இலங்கை மீனுணவு உற்பத்தித் துறையில் தொழிநுட்பம் மற்றும் அறிவியல் சார் உதவிகளை வழங்க முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பொன்றில், இலங்கையில் மீனுணவு உற்பத்தித் துறையை நீண்ட கால திட்டத்துடன் அபிவிருத்தி செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
மீனுணவு உற்பத்தி சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில், நீரியல் தாவர உணவு உற்பத்திக்கு சர்வதேச சந்தையில் பெரும் வரவேற்பு காணப்படுகின்றது.
 
இந்தநிலையில், குறித்த சந்திப்பின்போது இந்த விடயம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.







Exclusive Clips