Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
Sunday, 10 September 2017 - 18:55
மலரும் கிழக்கு கண்காட்சி இன்று ஆரம்பம்
289

Views
கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தினால் நடத்தப்படும் கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி  இன்று ஆரம்பமாகியுள்ளது.
 
அம்பாறையில்  இடம்பெறும் இந்த கண்காட்சி, "மலரும் கிழக்கு" என்ற தொனிப்பொருளில் இடம்பெறுகிறது.
 
இந்தக் கண்காட்சி எதிர்வரும் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
 
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் 2025 ஆம் ஆண்டுக்கான வளமான தொலைநோக்கை அடைவதற்கான பயணத்தில் கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்கும் விதத்தில் இந்தக் கண்காட்சியின் உள்ளடக்கங்கள் அமையப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கிழக்கு மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களின் சந்தை வாய்ப்பினை அதிகரித்தல் குறித்த கண்காட்சியின் பிரதான நோக்கமாக உள்ளது. 
 
முன்னதாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE