Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+40+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
Sunday, 17 September 2017 - 19:34
இலங்கை முதலீட்டுச் சபை ஸ்தாபிக்கப்பட்டு 40 வருடக்காலம் நிறைவு
27

Shares
3,255

Views
இலங்கை முதலீட்டுச் சபை ஸ்தாபிக்கப்பட்டு 40 வருடக்காலம் நிறைவடைந்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க ஏற்றுமதி வலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க உட்பட பல முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் துமிந்த ரத்நாயக்க மற்றும் இயக்குனர் நாயகம் துமிந்த ஆரியசிங்க ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வின் போது இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிறைவேற்று அதிகாரத்தை கொண்ட முதலாவது ஜனாதிபதியினால் முதன்முறையாக பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவென ஸ்தாபிக்கப்பட்ட இந்த அமைப்பு பின்னர் முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாஸவினால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

இதற்கமைய கொழும்பு பிராந்தியத்தை மட்டும் நடவடிக்கைகளாக கொண்டுள்ள இந்த அமைப்பு நாடாளாவிய ரீதியாக விஸ்தரிக்கப்பட்டது.

அதேவேளை, தற்போது இலங்கை முதலீட்டுச்சபையினால் 1700 வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE