இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் அதிகரிப்பு

Tuesday, 19 September 2017 - 8:29

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
2017 இன் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4 சதவீத அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
 
இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
 
முதலாம் காலாண்டில் இந்த வளர்ச்சி 3.8 சதவீதமாக நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேநேரம் கைத்தொழில் துறை அபிவிருத்தி 5.2 சதவீதமாகவும், சேவைகள் அபிவிருத்தி 4.5 சதவீதமாகவும் நிலவியுள்ளது.
 
மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 22 லட்சத்து 11 ஆயிரத்து 612 மில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
 







Exclusive Clips