Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Tuesday, 10 October 2017 - 8:36
சீன சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு
109

Views
இந்த ஆண்டு செப்டம்பர் வரையில் இலங்கைக்கு 2 லட்சம் சீன சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்ததகவல்களை சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

கடந்த மாதத்தில் மாத்திரம் 18 ஆயிரம் சீனர்கள் இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகளாக வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கைக்கு இந்த ஆண்டில் 1.5மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்ததாக அமைச்சு செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த வருட இறுதிக்குள் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்ட இலக்கான 2.5மில்லியன் சுற்றுலாப்பயணிகள் என்ற இலக்கை அடையமுடியும் என்றும் அமைச்சு எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகள் வருகை வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்தையும், பிரித்தானியா மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றன.

இதற்கிடையில் இந்த ஆண்டில் மாத்திரம் சுற்றுலாப்பயணிகள் மூலம் 2 பில்லியன் அமரிக்க டொலர்கள் இலாபமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE