உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 2 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

Tuesday, 24 October 2017 - 8:54

%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+2+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 2 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு சர்வதேச ரீதியில் கேள்வி கோரலை மேற்கொள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரிசார்ட் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்தியா, பாகிஸ்தான், பர்மா, கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பங்களாதேஸ் அகிய நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஏனைய நாடுகளும் இந்த கேள்வி கோரலில் பங்குகொள்ள முடியும் எனவும் அமைச்சர் ரிசார்ட் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 90 ஆயிரம் மெட்ரிக் டன் நாட்டரிசி, 60 ஆயிரம் மெட்ரிக் டன், சம்பா, 50 ஆயிரம் மெட்ரிக் டன் வெள்ளை அரிசி ஆகியன இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.







Exclusive Clips