வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த முன்வந்துள்ள அவுஸ்திரேலியா

Sunday, 29 October 2017 - 19:47

%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+
நவீன வகையிலான தொழில்நுட்பத்தை பிரயோகிப்பதன் மூலம் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா முன்வந்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயமும், இலங்கை வர்த்தக சம்மேளனமும் இணைந்து, நாளையும் நாளை மறுதினமும் வர்த்தக மாநாடொன்றை நடத்தவுள்ளது.

சர்வதேச வர்த்தகத்துடன் போட்டியிட இலங்கை வர்த்தகர்கள் புதிய தொழில் நுட்பத்தை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹச்சசன் (Bryce utchesson) வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாநாட்டில் அவுஸ்திரேலிய வர்த்தக ஆலோசகர்கள் நிபுணர்கள் உள்ளடங்கலாக வர்த்தக சமூகத்தவர்கள் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மாதிரி கிராமங்களை நிர்மாணிப்பதற்கு இலங்கைக்கு இந்தியா உதவி வழங்க முன்வந்துள்ளது.

இது தொடர்பாக கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரண்டு கைச்சாத்தாகியுள்ளன.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைய 50 மாதிரி கிராமங்களின் ஊடாக ஆயிரத்து 200 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு இந்தியா 60 கோடி ரூபா நிதி உதவியினை வழங்க முன்வந்துள்ளது.







Exclusive Clips