இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் முக்கிய கருத்தரங்கு

Friday, 03 November 2017 - 19:42

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
இலங்கை மத்திய வங்கி, வர்த்தக சமூகத்திற்கு எந்தவகையில் உதவிகளை முன்னெடுக்கலாம் மற்றும் மூல வாய்ப்புக்களை அதிகரிக்கலாம் என்பது தொடர்பில் முக்கிய கருத்தரங்கு ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த கருத்தரங்கு இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி காலை 9 மணி முதல் 12.30 மணிவரை இந்த நிகழ்வு, சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கில் இலங்கை மத்திய வங்கியை சேர்ந்த சிரேஷ்ட பொருளாதார நிபுணர்கள் உரையாற்றவுள்ளனர்.

இதன்போது நாணய மாற்று விகித கொள்கை, வெளிநாட்டு கையிருப்பு முகாமைத்துவம் போன்ற விடயங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கான பலதரப்பட்ட கடன் வசதிகள் குறித்த விபரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் குழு வர்த்தக உரிமையாளர்கள், வாங்கியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், பொருளாதார நிபுணர்கள் உட்பட வர்த்த நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கு தொடர்பான மேலதிக விபரங்களை பெற விரும்புவோர் [email protected] என்ற மின்அஞ்சலின் மூலம் பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips