Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88
Sunday, 05 November 2017 - 13:58
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய புதிய ஓடுபாதை
241

Views
கட்டுநாயக்க சர்வதேச வாநூர்தி நிலையத்தின் ஓடுபாதைகளின் தரத்தை மேலும் உயர்த்துவதுடன் புதிய ஓடுபாதைகளையும் நிர்மமாணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த வாநூர்தி நிலையத்தின் பயணிகளின் தொகையினை வருடாந்தரம் மேலும் இருபது லட்சத்தால் அதிகரிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது. 60 லட்சம் பயணிகள் வாநூர்தி தளத்தில் கையாளப்படுவதாக நிறைவேற்று பணிப்பாளர் ஜோனல் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

ஓடுபாதை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஒரு கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர்களில் இருந்து ஒரு கோடியே 90 லட்சம் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 2018ஆம் ஆண்டளவில் ஓடு பாதையில் அதிக அளவிலான வாநூர்திகள் ஏறி இறங்க முடியும்.

தற்போதுஇ கட்டுநாயக்க வரும் வாநூர்திகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதனால் பயணிகளை துரித கதியில் கையாள்வதில் அதிகாரிகள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

இது தவிரஇ கட்டுநாயக்க வாநூர்தி நிலையத்தின் ஓடுபாதைகள் கடந்த காலத்தில் திருத்தி அமைக்கப்பட்டதன் பின்னர் ஏ380 ரக வாநூர்திகளை இலகுவாக கையாள முடிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த மூன்று வருட காலப்பகுதியினுள்இ கணிசமான வருவாய் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE