மேம்பட்டு வரும் இலங்கை, சீனாவிற்கும் இடையேயான பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள்

Friday, 01 December 2017 - 19:51

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%2C+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேம்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் அண்டு இருதரப்பு வர்த்தகம் நான்கு தசம் ஐந்து ஆறு அமெரிக்க டொலர் மட்டத்தை எட்டியுள்ளதாக சீன கைத்தொழில் பொருளாதார சம்மேளனத்தின் நிறைவேற்று உப தலைவரும் செயலாளர் நாயகமுமான சியோங் மெங் தெரிவித்துள்ளார்.

சீனா, முதலீடும் நாடுகளில், இலங்கை முக்கிய பங்கினை வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில், அண்மையில் இடம்பெற்ற பொருளாதார தொடர்பான மாநாட்டின் நிறைவில் பங்கு கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

கொழும்பு துறைமுக நகர திட்டத்தில் சீனா பாரிய முதலீட்டை செய்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புக்கள் ஏற்படும்.

இதன் மூலம் இரு நாடுகளின் பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, சீன வர்த்தக தரப்பினர், கொழும்பு வர்த்தக சம்மேளனம் மற்றும் ஏனைய வர்த்தக அமைப்புக்களுடன் நெருக்கமான உறவை ஸ்தாபித்துள்ளதன் காரணமாக, இலங்கை வர்த்தக நிறுவனங்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் சியோங் மெங் தெரிவித்துள்ளார்.







Exclusive Clips