திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் இறுதி கட்டத்தில்

Sunday, 03 December 2017 - 13:31

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.
 
இந்த அபிவிருத்தி திட்டங்களை சிங்கப்பூர் நாட்டின் முக்கிய நிறுவனம் ஒன்று நடைமுறைப்படுத்தவுள்ளது.
 
இதற்கமைய திருகோணமலை நகர் பகுதி வர்த்தக கட்டிடங்கள், சுற்றுலாதுறை வலையம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு வலையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
 
இதேவேளை, உப்புவெளி, தம்பளகாமம், கிண்ணியா ஆகிய பிரதேசங்கள் மக்கள் செரிந்துவாழும் வலையமாகவும் மூதூர் உணவு உற்பத்தி வளையமாகவும் கந்தளாய் விவசாய உபகரண உற்பத்தி துறையாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
 
 இதனிடையே, புல்மோடை, மொரவௌ, சேறுவில பகுதிகள் விவசாய உற்பத்தி வலையங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
 
இதுதவிர நிலாவெளி, குச்சிவெளி சுற்றுலா வலையங்களாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
 
இதேவேளை, திருகோணமலையில் சுற்றுலா தள துறைமுகம் ஒன்று கட்டியெழுப்பப்படவுள்ளது.
 
இதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளது.
 
 இதேவேளை, மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் 297 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் சீனி, பால் மற்றும் பசளை உற்பத்தி குறித்த முதலீட்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips