Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
Thursday, 11 January 2018 - 9:41
இலங்கை மருந்து தயாரிப்பு வலயத்தில் மலேசிய நிறுவனம் முதலீடு
107

Views
இலங்கை மருந்து தயாரிப்பு வலயத்தில் மலேசிய நிறுவனமொன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளது.

குறித்த நிறுவனத்துடன் இது தொடர்பிலான உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மருந்து உற்பத்தி தயாரிப்பு வலயம் வெலிப்பன்ன என்ற பிரதேசத்திலேயே அமைந்துள்ளது.

இலங்கை முதலீட்டுச்சபை இதற்கென 50 ஏக்கர் நிலப்பகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

வர்த்தக ரீதியில் மாத்திரமின்றி இலங்கை மக்கள் பலரும் நன்மை அடையக்கூடிய வகையில் இதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE