கடந்த ஆண்டு இலங்கையின் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

Tuesday, 16 January 2018 - 18:48

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கடந்த ஆண்டு இலங்கையின் தேயிலை உற்பத்தி 5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இதன் ஊடாக கடந்த ஏழு ஆண்டு காலமாக நிலவிய குறைமட்ட உற்பத்தி நிலைமையில் இருந்து இலங்கையின் தேயிலைத் துறை மீட்சி அடைந்திருப்பதாக தேயிலை சபை தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை, இரசாயன மருந்து வகைக்கான தடை உள்ளிட்ட விடயங்களால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி அடைந்திருந்தது.

எனினும் கடந்த 2017ம் ஆண்டு இந்தநிலைமையில் இருந்து மாறி, அதிக தேயிலை உற்பத்தி இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேயிலை உற்பத்தி 13.5 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் காலநிலை சீரடையும் பட்சத்தில், 320 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







Exclusive Clips