தைக்கப்பட்ட ஆடை தொழிற்துறையை முன்னெடுக்க இணைந்து செயல்பட வேண்டும்

Sunday, 11 February 2018 - 18:09

%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மற்றும் பங்களாதேஷ் தைக்கப்பட்ட ஆடை தொழிற்துறையை முன்னெடுக்க இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் இரு நாடுகளிலும் தைக்கப்பட்ட ஆடை மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 
கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய தைக்கப்பட்ட ஆடைத்தொழில் நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக புத்தி ஜீவிகள் இந்த கருத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
தற்போது தைக்கப்பட்ட ஆடை தொழில் மூலம் இலங்கை நான்கு தசம் ஏழு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுகின்றது.
 
அதேவேளை, ஆடை உற்பத்தி மூலம் பங்களாதேஷ் இருபத்து எட்டு தசம் ஒன்று நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக பெறுகின்றது.
 
சர்வதேச ரீதியாக தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியில் சீனாவிற்கு பின்னர் பங்களாதேஷ் இரண்டாவது இடத்தில் உள்ளது.
 
சீன ஆடை உற்பத்தி தொழிலில் 44 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
 
அதேவேளை, புதிய தொழில் நுட்பத்தை பிரயோகிப்பதன் மூலம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பரஸ்பரம் நிபுணத்துவ செயல்பாடுகளை பகிர்ந்து கொள்ள முடியும் என பங்களாதேஷ் தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர் சங்கத்தின் சிரேஷ்ட தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதன் மூலம் அந்நிய செலவணியை அதிக அளவில் பெறும் வாய்ப்பினை இரு நாடுகளும் பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 







Exclusive Clips