Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Tuesday, 13 February 2018 - 9:49
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரித்தானிய மேலும் பங்களிப்பு வழங்கும்
17

Shares
2,063

Views
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் நிலையில், மேலதிகமாக பிரித்தானிய நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பினை மேம்படுத்துவதற்கான வசதி வாய்ப்புக்களுக்கு ஊக்கமளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இலங்கைக்கான பிருத்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் (James Dauris) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிருத்தானிய பிரதமர் தெரேசா மேயினால் இலங்கைக்கான விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள பிருத்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன இலங்கைகான விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட பிரதிநிதி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

இந்த காலப்பகுதியினில், இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து உரிய பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்கமைய பிருத்தானிய வர்த்தக நிறுவனங்கள் இலங்கை வர்த்தக சமூகத்துடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரு நாடுகளின் வர்த்தகம் அதிக அளவில் மேம்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE