Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%2C+%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
Wednesday, 14 March 2018 - 8:34
இலங்கை, ஜப்பான் முதலீட்டை வலுப்படுத்த மாநாடு
246

Views
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முதலீடு மாநாடு நேற்று ஜப்பானில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் டோக்கியோவில் உள்ள இம்பிரியல் மாளிகையில் இந்த மாநாடு நடைபெற்றது.

அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சர் மலித் சமர விக்கிரம, ஜப்பான் நாடாளுமன்ற பொருளாதார வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை துணை அமைச்சர் மசகி ஒகுசி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE