தொண்டமானாறு அணைக்கட்டினை புதுப்பிக்கும் நடவடிக்கைகள்

Sunday, 18 March 2018 - 13:42

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள தொண்டமானாறு அணைக்கட்டினை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் பூர்த்தியடைந்ததன் பின்னர் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் சம தரை நிலத்திற்கான நீர்ப்பாசனத்தை பெறக்கூடியதாக இருக்கும்.

இது தவிர, நிலத்தின் அடியில் இருந்து பெறப்படும் மாசடைந்த குடிநீருக்குப் பதிலாக சுத்தமான குடிநீரினையும் குடாநாட்டு மக்கள் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக 40 கோடியே 50 லட்சம் ரூபாவினை அரசாங்கம் முதலீடு செய்துள்ளது.

இந்த திட்டம் நீர்ப்பாசன திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன், மேலதிக நிதி உலக வங்கியிடமிருந்து பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 சத வீதமான திட்டம் தற்போது பூர்த்தியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் மே 15 ஆம் திகதி அளவில் முற்றாக பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

திட்டமிட்டது போல, பணியினை பூர்த்தி செய்ய முடியும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் வட மாகாண கிளிநொச்சி பிரிவின் திட்ட பணிப்பாளர் வி. பிரேமகுமார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.







Exclusive Clips