வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் - விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு

Monday, 19 March 2018 - 8:57

%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
2018ம் ஆண்டு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவடைகிறது.

2016ஆம் ஆண்டு, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு, அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டதாரிக் கற்கை நெறியைத் தொடர்வதற்காக இந்த வட்டியற்ற மாணவர் கடனுதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 8 இலட்சம் ரூபாவை அரசாங்க வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தக் கடன் தொகைக்கான தவணைக் கட்டணம் 5 வருடங்களின் பின்னர், மாணவர்கள் தொழிலில் ஈடுபடும் போது அறிவிக்கப்படும்.

இந்தக் கடன் திட்டத்தின் கீழ், 5 ஆயிரம் மாணவர்கள் உள்வாங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும் உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, அரச பல்கலைக்கழகம் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில், உயர் கல்வியை தொடர தகுதி பெற்ற மாணவர்கள், குறித்த கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips