Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
Thursday, 17 May 2018 - 8:07
இலங்கை மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான அமைச்சரவை அனுமதி
165

Views
கடல்வள அபிவிருத்திக்காக இலங்கை மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை ஏற்படுத்திக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான யோசனை, துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

கடல்வள அபிவிருத்திக்காக தொழில்நுட்ப தகவல்களை இரு நாடுகளுக்குமிடையில் பரிமாறிக் கொள்ளும் நோக்கியே குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இலங்கையின் துறைமுக, கப்பல் துறை அமைச்சு மற்றும் கொரிய குடியரசின் சமுத்திர மற்றும் மீன்பிடி கைத்தொழில் அமைச்சுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE