திறந்த வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வு

Sunday, 20 May 2018 - 13:43

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் மேலும் சில நாடுகளுடன் திறந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வது குறித்து ஆராய்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வாரம் கொழும்பில் நடந்த கருத்தரங்கில் பங்கு கொண்டு உரையாற்றிய அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகதுறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
 
இந்த விடயம் குறித்து தாய்லாந்து, சீனா, இந்தோனேஷியா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளுடன் ஏற்கனவே தொடர்பினை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
அதேவேளை, குறிப்பாக தாய்லாந்துடன், திறந்த பொருளாதார ஒப்பந்தம் குறித்து எதிர்வரும் சில மாதங்களில் நேரடிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில் ராஜதந்திர மட்டத்தைக் கொண்ட 11 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
கடந்த 2015ஆம் ஆண்டு பதவி ஏற்ற தற்போதைய அரசாங்கம் பருவின பொருளாதார ஸ்திரத்தன்மையினை அறிமுகப்படுத்தியுள்ளதன் காரணமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்களை கவர கூடிய நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நிலையில், 2017ஆம் ஆண்டு வெளிநாட்டு முதலீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 802 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 







Exclusive Clips