நிதி நிறுவனங்கள் மூலம் கடன்களை பெறுபவர்களுக்கான ஓர் செய்தி..

Saturday, 26 May 2018 - 19:15

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..
நிதி நிறுவனங்கள் மூலம் கடன்களை பெறும் பொது மக்கள் அது தொடர்பில் அவதானத்துடன் இருப்பது, நிலவுகின்ற கடன் நெருக்கடி பிரச்சினைகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள முடியுமென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 
கடன் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று திருகோணமலையில், இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
 
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய, இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசாமி இதனை தெரிவித்துள்ளார்.
 
மக்கள் தாம் பெறுகின்ற கடன்கள் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலமாகவா பெறப்படுகின்றது என பரிசீலித்து கொண்டு கடனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
 
அது குறித்த தகவல்களை தெளிவாக அறிந்து கொள்ள மக்களுக்கு  உரிமையுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 







Exclusive Clips