இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ரிக்காடோ..

Sunday, 27 May 2018 - 13:36

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B..
சர்வதேச அபிவிருத்தி மத்திய நிலையத்தின் இயக்குனரும், அமெரிக்க ஹவாட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ரிக்காடோ ஹவூஸ்மான் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
 
அவருடன் ஹவாட் பல்கலைக் கழகத்தை சேர்ந்த கல்விமான்களும் வருகை தந்துள்ளனர்.
 
அவர்கள் இலங்கை முதலீட்டு சபைக்கு விஜயம் செய்து, உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
 
இந்த சந்திப்பின் போது, இலங்கை முதலீட்டு சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான புதிய முறைமை குறித்த விளக்கம் ஒன்றை சபையின் இயக்குனர் நாயகம் துமிந்த ஆரியசிங்க விளக்கம் ஒன்றை அளித்தார்.
 
இலங்கை உற்பத்தியாளர்கள், குறிப்பாக தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர்கள் சர்வதேச தரத்தை கொண்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தாததனால் உற்பத்தி துறையில் பின்னடைவை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வியட்நாம் போன்ற வளர்ந்து வரும் உற்பத்தி நாடுகள், தற்போது தைக்கப்பட்ட ஆடைத்துறையுடன், இலத்திரனியல் மற்றும் இயந்திராதிகள் உற்பத்தியிலும் ஈடுபடுகின்றனர்.
 
இதன் காரணமாக வியட்நாம் ஏனைய நாடுகளின் உற்பத்தி திறனை ஒத்த பணிகளில் மேம்பட்டு வருகின்றனர்.
 
இது தவிர, இலங்கையின் பொருளாதாரத்தை குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் மேம்படுத்துவதற்கான பல்வேறு ஆலோசனைகளை ஹவாட் பல்கலைக்கழக குழுவினர், இலங்கை முதலீட்டு சபைக்கு வழங்கியுள்ளனர்.







Exclusive Clips