Hirunews Logo
7%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%27%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%27+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D
Thursday, 14 June 2018 - 11:53
7வது முறையாக நடாத்தப்படும் 'ரெட் புல்' பல்கலைக்கழக கிரிக்கட் தொடர்
59

Views
ரெட் புல் அணுசரனையின் கீழ் நடாத்தப்படும் RBCC இலங்கை ரெட் புல் பல்கலைக்கழக கிரிக்கட் தொடர் ஏழாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பமாகவுள்ள இப்போட்டித் தொடர் கொழும்பு BRC மற்றும் கோல்ட்ஸ் கிரிக்கட் விளையாட்டுத் திடல்களில் இடம்பெறவுள்ளன.

இந்த போட்டித்தொடரில் இலங்கையின் 24 முன்னணி பல்கலைக்கழக அணிகள் பங்கேற்கவுள்ளதாக கடந்த தினத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் RBCC குறிப்பிட்டுள்ளது.

தேசிய போட்டியில் வெற்றிப்பெறும் அணி , அடுத்ததாக இடம்பெறவுள்ள சர்வதேச போட்டித்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடவுள்ளது.

இதேவேளை , கடந்த 6 போட்டித்தொடர்களில் இருந்து இந்திய அணியின் கே.எல் ராஹுல் , தென்னாபிரிக்கா அணியின் லுன்கி இன்கிட் , ஐக்கிய அரபு அமீரகத்தின் சிராக் சூரி , இலங்கை அணியின் பிரபல விரரான நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RBCC என்ற ரெட் புல் பல்கலைக்கழக கிரிக்கட் தொடரில் சர்வதேச கிரிக்கட் விதி முறைகள் பின்பற்றப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

இதன் பணிப்பாளராக ப்ரன்டன் குருப்பு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் , வர்த்தக தூதுவராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மாஹானாம செயற்படுகிறார்.

அதேபோல், எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ரெட் புல் பல்கலைக்கழக உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இலங்கையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டு தொடக்கம் 2017ம் ஆண்டு வரையில் இடம்பெற்ற போட்டித் தொடர்களில் வெற்றிக் கிண்ணத்தை வென்ற அணிகள் கீழே....

 

    
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE