பசும்பால் மூலமான தயாரிப்பு..

Thursday, 21 June 2018 - 10:26

%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
பசும்பால் மூலமான தயாரிப்புக்களை அதிகரிப்பதன் பொருட்டு 30 பால் சேகரிக்கும் மத்திய நிலையங்களும் 6 பால் பதனிடும் நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
 
மட்டக்களப்பு, கடுவல, அத்தனகலை, பொலநறுவை, வாரியபொல மற்றும் வென்னப்புவ ஆகிய பிரதேசங்களில் குறித்த பதனிடும் நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
 
இவற்றுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
 
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
 
இதன்மூலம் கிராம பிரதேசங்களில் சேகரிக்கப்படும் பசும்பால் மூலமான தயாரிப்புக்களை அதிகரிப்பதன் ஊடாக பாற்பண்ணையாளர்களின் வருமானத்தை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.







Exclusive Clips