Hirunews Logo
600+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81...
Thursday, 12 July 2018 - 9:06
600 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான தொடரூந்து பெட்டிகள் இலங்கைக்கு...
180

Views
இந்திய தொடருந்து திணைக்களத்தினால் இலங்கைக்கு 600 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான தொடருந்து பயணப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

மொத்தமாக 78 நவீன தொடருந்துப் பெட்டிகள் அடங்கிய 6 தொகுதிகள் இலங்கைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முதல்கட்டமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 தொகுதிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

ஏனையவை இந்த வருட இறுதிக்குள் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

வளிபதனாக்கி பொருத்தப்பட்ட முதற்தர பயணப்பெட்டிகளும், 2ம் மற்றும் மூன்றாம் வகுப்புப் பெட்டிகளுமாக இந்த தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE