Hirunews Logo
+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
Friday, 10 August 2018 - 9:25
இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி
1

Shares
182

Views
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி நேற்று சிறிய அளவான வீழ்ச்சியுடன் பதிவாகியுள்ளது.
 
நேற்று ஒரு டொலருக்கான இலங்கை நாணயத்தின் பெறுமதி 159 ரூபாய் 95 சதத்துக்கும், 160 ரூபாய் 10 சதத்துக்கும் இடையில் பதிவாகி இருந்தது.
 
நேற்று முன்தினம் புதன்கிழமை இந்த பெறுமதி 159 ரூபா 90 சதத்துக்கும், 160 ரூபாவிற்கும் இடையில் பதிவாகி இருந்தது.
 
இறக்குமதி டொலர்களது அதிக கேள்வியின் காரணமாக நாணயத்தின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைகின்ற போதும், குறுங்காலத்துக்கு தற்போது நிலவுகின்ற பெறுமதியிலேயே இலங்கை நாணயம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த ஜுன் மாதம் 17ம் திகதி இலங்கை நாணயத்தின் டொலருக்கு நிகரான பெறுமதி, 160 ரூபாய் 17 சதம் என்ற அதிகுறைந்த வீழ்ச்சியில் பதிவாகி இருந்தது.
 
இந்த ஆண்டில் மாத்திரம் இலங்கை நாணயத்தின் பெறுமதி 4.2 சதவீத வீழ்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE