Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Friday, 10 August 2018 - 19:59
வடகொரியா கடும் கண்டனம்
65

Views
வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை நீக்கப்படாமைக்கு தமது கடும் கண்டனத்தை வடகொரியா வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வடகொரிய வெளிவிவகாரத்துறை அமைச்சு கருத்து தெரிவிக்கையில் அமெரிக்காவுடன் உறுதியான நல்லெண்ண செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா எந்தவிதமான நன்றியினை வெளிப்படுத்தவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வடகொரியாவின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்கள் குறித்து அமெரிக்கா முழு அளவில் திருப்தி கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவிற்கு எதிரான பொருளாதார தடையினை முற்றாக நீக்குவதற்கு, வடகொரியா முழு அளவிலான அணு ஆயுத பரவலை முற்றாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE