இந்தோ-இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன மாநாடு

Tuesday, 14 August 2018 - 8:43

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
10வது வருடாந்த இந்தோ-இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன மாநாடு நேற்று இடம்பெற்றது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் இந்திரா மல்வத்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து தொழில் முனைவோரின் முயற்சிகள், இரண்டு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியான நலன்களை அதிகரிப்பதாக, இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த ஓராண்டு காலமாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக மற்றும் ராஜதந்திர தொடர்புகள் முக்கிய மைல் கல்லை கடந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.










Exclusive Clips