தேங்காயின் விலையில் பாரிய வீழ்ச்சி

Tuesday, 21 August 2018 - 9:00

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
உள்நாட்டு ஏலச் சந்தையில் தேங்காயின் விலை கடந்த மாதத்தைக் காட்டிலும் 30 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் ஏலச் சந்தையில் 1000 தேங்காய்களின் தொகுதி 45 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனையாகியுள்ளது.

எனினும் இந்த மாதம் 16ம் திகதி இடம்பெற்ற ஏலச் சந்தையில் 1000 தேங்காய்களின் தொகுதி 30 ஆயிரத்து 793 ருபாய்களுக்கு விற்பனையானதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்தமுறை ஏலச்சந்தையில் 1.7 மில்லியன் தேங்காய்கள் நிரம்பல் செய்யப்பட்ட போதும், 1.3 மில்லியன் தேங்காய்களே விற்பனையாகி இருக்கின்றன.

இந்தநிலையில் தேங்காய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.









Exclusive Clips