Hirunews Logo
160+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+
Saturday, 08 September 2018 - 9:05
160 தொடருந்து பயணிகள் பெட்டிகளை இலங்கைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து
2

Shares
291

Views
இலங்கைக்கு 160 தொடருந்து பயணிகள் பெட்டிகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்தாகியுள்ளது.

82.64 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த பயணிகள் பெட்டிகள், இலங்கைக்கு சலுகை நிதித்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.

இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொடருந்து பெட்டிகள், இலங்கையில் தேவைகளுக்கு அமைய இந்திய நிறுவனத்தினால் தயாரித்து வழங்கப்படவுள்ளன.

2017ம் ஆண்டு ஜுன் மாதம், இலங்கையின் தொடருந்து சேவை அபிவிருத்திக்காக 318 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனுதவித் திட்டத்துக்கான ஒப்பந்தம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்தாகி இருந்தது.

அதன் அடிப்படையிலேயே தற்போதைய புதிய ஒப்பந்தம் கைச்சாத்தாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE