Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF
Sunday, 09 September 2018 - 13:59
காற்றாடி மூலம் மின்வலுவினை உற்பத்தி செய்யும் பணி
316

Views
வட மாகாண முதலீட்டாளர்ளை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை முதலீட்டு சபை கடந்த 2010ஆம் ஆண்டு செயலகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்திருந்தது.

எப்படியிருப்பினும், எதிர்பார்த்த வகையில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வத்தை காட்டவில்லை.

எப்படியிருப்பினும், தற்போது நாட்டில் நல்லிணக்கம் நடவடிக்கைகளை மேம்படுத்த அரசாங்கம் செயல்படும் தருணத்தில், முதலீட்டு சபை வட மாகாண முதலீட்டிற்கு முன்னுரிமை வழங்க முன்வந்துள்ளது.

யாழ்ப்பாண குடாவில் தற்போது காற்றாடி மூலம் மின்வலுவினை உற்பத்தி செய்யும் பணியில் இரு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இது தவிர, மேலும் இரு மின்வலு உற்பத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

முதலீட்டு சபையின் ஊடாக ஆறு தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர்கள் 8 ஆயிரம் மில்லியன் ரூபாவினை முதலீடு செய்துள்ளனர்.

இந்த திட்டங்களின் ஊடாக 7 ஆயிரத்து 917 வேலை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

இது தவிர, வட மாகாணத்தில் பல தரப்பட்ட மேலும் 15 திட்டங்கள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலும் 837 புதிய வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திட்டமிடப்பட்ட சகல திட்டங்களும் அமுல் படுத்தப்படும் போது மொத்தமாக 46 ஆயிரத்து 484 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படுவதன் மூலம் 10 ஆயிரத்து 142 வேலை வாய்ப்பு வசதிகள் கிட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE