Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%2C+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%21%21
Sunday, 09 September 2018 - 20:19
இரத்தினக்கல், தங்க ஆபரண ஏற்றுமதி மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய்!!
48

Views
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண ஏற்றுமதி மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயினை மிக விரைவில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்களுக்கான இலங்கை அம்சம்கள்' என்ற தொனியிலான காட்சியகம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர் சரத் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சார்பாக இந்த காட்சியகத்தை திறந்து வைத்து உரையாற்றிய அவர், புவியியல் நில அளவை பணியகம் மாணிக்க கல் தொடர்பான பெறுமதியான தகவல்களை தமது ஆய்வு மூலம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கிழக்கு கரையோர பிரதேசம் மற்றும் வட மத்திய மாகாணங்களில் அதிக அளவிலான இரத்தினக்கல் படிவங்கள் உள்ளமை தெரியவந்துள்ளன.

இந்த படிவங்களை உரிய முறையில் அகழ்வதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நிலையில் இலங்கை நாணயத்தின் பெறுமதியினை அதிகரிக்க வேண்டிய அவசிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சரத் அமுனுகம, இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண தொழில்தரப்பினரால் அதிக கணிசமான பங்களிப்பை வழங்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE