Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
Monday, 10 September 2018 - 13:38
இன்று எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
8

Shares
997

Views

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீமானிக்கும் குழு இன்று மாலை கூடுகிறது.

புதிய அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய ஒவ்வொறு மாதம் 10 ஆம் திகதி எரிபொருள் விலை சூத்திரம் மறுசீரமைக்கப்படுகின்றது.

அதன்படி, இன்றைய தினம் அது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள குழு கூடி புதிய விலை சூத்திரம் தொடர்பில் அறிவிக்கவுள்ளது.

கடந்த மாத எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இரண்டு வகையான எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 157 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

சுப்பர் டீசல் லிட்டர் ஒன்றின் விலை, ஒரு ரூபாவினால் அதிகரித்து 130 ரூபாவாக விலை மறுசீரமைப்பு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE