Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Tuesday, 11 September 2018 - 9:19
வடக்கில் தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியினை மேம்படுத்த நடவடிக்கை
667

Views
வட மாகாணத்தில் தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியினை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை முதலீட்டுச் சபை, நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

முதலீட்டு சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தைக்கப்பட்ட ஆடை உற்பத்தி நிறுவனங்கள், வட மாகாணத்தின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி உட்பட 6 பிரதேசங்களில் தமது தொழில்துறையை ஆரம்பிக்க உள்ளன.

மொத்தமாக, 49 ஆயிரத்து 265 அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகள் வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனூடாக 7 ஆயிரத்து 917 பணியாளர்களுக்கான நேரடி வேலைவாய்ப்புகளும் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, விவசாயம், மருத்துவம், நிர்மாணம் மற்றும் வலு சக்தி போன்ற துறைகளிலும் வட மாகாணத்தில் 15 திட்டங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான முதலீடு ஒரு லட்சம் அமெரிக்க டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளதுடன், 837 பேருக்கான தொழில்வாய்ப்புக்களும் வழங்கப்படும் என அந்த முதலீட்டு சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE