Wednesday, 12 September 2018 - 8:58
தேயிலையை சர்வதேச ரீதியாக மேலும் பிரபல்யப்படுத்தும் நடவடிக்கை
இலங்கையின் தேயிலையை சர்வதேச ரீதியாக மேலும் பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைகளை இலங்கை தேயிலை சபை ஆரம்பிக்கிறது.
ரஷ்யா, யுக்ரென், சீனா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்காக சமுக வலைதளங்கள், அச்சூடகங்கள் ஆகியவற்றில் பாரிய விளம்பர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு சுற்றுகளாக இந்த நடவடிக்கைகள் இடம்பெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் ஊடாக குறித்த நாடுகளுக்கான இலங்கைத் தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.