Hirunews Logo
+350+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF
Friday, 14 September 2018 - 14:33
350 கோடி டொலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணி
922

Views
மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வரும் இலங்கையர்கள் மூலம் மூவாயிரத்து 350 கோடி டொலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணி கிடைத்துள்ளது.

பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டிலிருந்து இதுவரை இந்த அந்நியச் செலாவணி கிடைக்க பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாத கணக்கெடுப்புக்களின் பிரகாரம், மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 6 இலட்சத்து 37 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களில் அதிகளவிலானோர் சவுதி அரேபியாவில் பணியாற்றுகின்றமை குறிப்பிடதக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE